சட்டத்தை மதிக்காத சாரதிகள்: முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்

Sri Lanka Police Investigation Eastern Province Accident Death
By Bavan Jul 11, 2023 02:39 PM GMT
Report

சாரதிகள் அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவது மற்றும் அளவுக்கு மிஞ்சிய பயணிகளை ஏற்றுவதுடன் சிலர் மத போதையில் வாகனம் செலுத்துவதை வீதிப்போக்குவரத்து பொலிஸார் முறையாக கண்காணிப்பு மேற்கொள்ளாத காரணத்தாலே மன்னம்பிட்டி விபத்து இடம்பெற்றுள்ளது.

எனவே சட்டத்தையும் வீதி ஒழுங்கு முறைகளையும் மதிக்காமல் செயற்படும் சாரதிகள் நடத்துனர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் முன்னால் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.

மன்னம்பிட்டியில் இடம்பெற்ற பஸ் விபத்து தொடர்பாக இன்று (11.07.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

சாரதிகளின் கவனயீனம்

சட்டத்தை மதிக்காத சாரதிகள்: முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் | Manampitiya Bus Accident Latest Update

குறித்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

“மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டத்தை மதிக்காத வாகனச் சாரதிகளின் கவனயீனத்தினால் விபத்து நடந்து பல அப்பாவி உயிர்கள் தொடர்ச்சியாக காவு கொள்ளப்படுகின்றன.

இதன் காரணமாக போக்குவரத்துச் செய்யும் பிரயாணிகள் விபத்துக்களால் பலர் அங்கவீனமடைகின்றதுடன் பொருட்சேதம் மற்றும் உடமைகளுக்கு சேதங்கள் ஏற்படுகின்றது.

அன்றாட வாழ்வாதார தேவைப்பாட்டின் நிமித்தம் பிரயாணிகள் இரவு நேரங்களில் பயணம் மேற்கொள்ளும் போது உயிரை கையில் பிடித்த நிலையில் அச்சத்துடனும், பதற்றத்துடனும் பிரயாணம் செய்கின்றார்கள்.

பல நூற்றுக்கணக்கான உயிர்கள் ஒருவரை நம்பியே பயணம் செய்வதால் பல உயிர்களை ஏற்றிச் செல்லும் சாரதி எவ்வளவு பொறுப்புடனும், அக்கறையுடனும், கன்னியமாகவும், தெளிவாகவும் பாதுகாவலனாகவும் செயற்பட வேண்டும்.

பயனிகளின் பாதுகாப்பு

சட்டத்தை மதிக்காத சாரதிகள்: முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் | Manampitiya Bus Accident Latest Update

இம் மாவட்டத்தில் நேர்மையோடு பணியாற்றும் சட்டத்தை மதிக்கும் சாரதிகளும் நடத்துனர்களும் பலர் இருக்கின்ற வேளையில் ஒருசிலரின் செயற்பாடுகள் காரணமாக பல உயிர்கள் காவு கொள்ளப்படுகின்றது சரியாக கடமையாற்றும் சாரதிகளை நாம் மதிப்பதோடு, அவர்களை நாம் கௌரவப்படுத்துகின்றோம்.

இதற்கு மாறான முறையில் ஒப்படைக்கப்பட்ட பணியை துஸ்பிரயோகம் செய்யும் சாரதிகளையும், நடத்துனர்களையும் அவர்களது சட்டத்தையும் ஒழுங்காக மதிக்காது உதாசீனச் செய்கைகளை இட்டு கடும் கண்டனம் தெரிவிப்பதுடன் அவர்களுக்கு எதிராக முறையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு நியாயமான முறையில் நீதி வழங்கப்படவேண்டும்.

பயணம் மேற்கொள்ளும் பொது மக்களின் பயணம் இனியாவது பாதுகாப்பாக அமைய சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுப்பதோடு சாரதிகள் பொறுப்புணர்வுடன் தம்மை நம்பி பயணிக்கும் மக்களை பாதுகாப்பாக தங்கள் இருப்பிடம் கொண்டு சேர்ப்பதற்கு பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும்.” என குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW   


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US