கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தின் நிர்வாகத்தை மாற்ற திட்டம்
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தின் நிர்வாக மாற்றம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை நேற்று(13.01.2024) ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது கூறியுள்ளார்.
புதிய வேலைத்திட்டம்
தொடர்ந்து மோதல்கள் இடம்பெற்று வரும் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் அதன் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கந்தகாடு புனர்வாழ்வு நிலையம் தொடர்பில் புதிய வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் உணவுப் பிரச்சினை காரணமாக ஏற்பட்ட மோதலால் 29 கைதிகள் நேற்று முன்தினம்(12) தப்பிச் சென்ற நிலையில், அவர்களில் 16 பேர் மாத்திரம் நேற்று புலஸ்திபுர பொலிஸில் சரணடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |