முல்லைத்தீவில் கடற்றொழிலுக்கு சென்றவரை காணவில்லை!
முல்லைத்தீவு கொக்கிளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகத்துவாரம் பகுதியில் கடற்றொழிலுக்கு சென்ற நபர் இன்னும் கரைக்குத் திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் நேற்று(27) இரவு 8:30 மணியளவில் கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் இன்னும் கரை திரும்பவில்லை.
23 அகவையுடைய வர்ணகுலசூரிய நெகித் ரவிஷா பெர்னாண்டோ என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
பொலிஸார் விசாரணை
இதனையடுத்து, இந்த நபரின் உறவினர்களால் கொக்கிளாய் பொலிஸ் நிலையத்தில் இன்று(28) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நபர் கடற்றொழிலுக்கு சென்ற OFRP/A/5286/PTM என்ற எண்ணைக் கொண்ட படகு நாயாறு முகத்துவாரத்தின் முகத்துவாரத்திற்கு அருகிலுள்ள கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுவரை கடற்றொழிலாளர் குறித்து எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குழந்தைக்காக சக்தி சொன்ன விஷயம், கதறி அழும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam