வெளிநாடு செல்ல கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற நபருக்கு நேர்ந்த சோகம்
வெளிநாடு செல்வதற்காக பயணித்துக்கொண்டிருந்த நபர் ஒருவர் இடையில் தெதுறு ஓயாவில் நீராடச்சென்றபோது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குருநாகல், மஹவ - பலகொல்லாகம பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அனுராதபுரம் பகுதியை சேர்ந்த 52 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
மேற்படி நபர் வெளிநாடு செல்வதற்காகத் தனது பயணத்தைத் தொடங்கி, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நோக்கி வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

பயணத்தின் இடையே பலகொல்லாகம பகுதியில் உள்ள தெதுறு ஓயாவில் நீராடுவதற்காக அவர் இறங்கிபோது, ஆற்றின் நீர்ச்சுழலில் சிக்கி எதிர்பாராத விதமாக அவர் நீரில் மூழ்கியுள்ளார்.
நீரில் மூழ்கியவரை நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் மீட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
விமான நிலையம் நோக்கிச் சென்ற பயணி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தமை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan