தனிமையிலிருந்த தாய் மற்றும் குழந்தைகளுக்கு நேர்ந்த கொடுமை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
தாய் மற்றும் இரு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த ஒருவருக்கு 41 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஹோமாகம மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க நேற்று (30) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பெண்ணின் கணவர் அலுவலகப் பணிக்காக வீட்டை விட்டு வெளியேறிய பிறகு, அதிகாலை 4 மணியளவில் கத்தி முனையில் பெண்ணையும் அவரது இரு மகள்களையும் பாலியல் வன்கொடுமை செய்தவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முதல் குற்றச்சாட்டிற்காக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை
அரசு தரப்பு சாட்சியங்களை ஆராய்ந்த பிறகு, குற்றச்சாட்டுகளுக்கு தானாக முன்வந்து குற்றத்தை ஒப்புக்கொண்ட குற்றம்சாட்டப்பட்டவர், அவர் மீதான நான்கு குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டு, வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்த முதல் குற்றச்சாட்டிற்காக ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தாய் மற்றும் இரண்டு மகள்களை கடுமையாக பாலியல் வன்கொடுமை செய்ததற்காக இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் குற்றங்களுக்காக தலா 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்த நீதிபதி, மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் ஒரே நேரத்தில், அதாவது 12 ஆண்டுகளில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆறு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

வீட்டு உடைப்பு, கொள்ளை, மொபைல் போன் திருட்டு மற்றும் ஹெரோயின் வைத்திருந்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுக்காக முன்னர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்ட பிரதிவாதிக்கு,முந்தைய குற்றவியல் பதிவுகளின் அடிப்படையில், 2009 ஆம் ஆண்டு ஹோமாகமா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஒரு வருடம் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண், தாங்கள் அனுபவித்த துயரங்களை எந்த தயக்கமும் இல்லாமல் சுட்டிக்காட்டியுள்ளர்.
இதன்போது குற்றம் சாட்டப்பட்டவருக்கு தண்டனை வழங்குவதற்கு முன்பு பாதிக்கப்பட்ட பெண், இரண்டு சிறுமிகளிடமும் ஏதாவது சொல்ல வேண்டுமா என்று நீதிவான் வினவிய போது, குற்றம்சாட்டப்பட்டவரிடமிருந்து எந்த இழப்பீடும் தேவையில்லை என்றும் கூறியுள்ளனர்.
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    77 பந்தில் சதமடித்த 22 வயது வீராங்கனை! உலகக்கிண்ண அரையிறுதியில் சாதனை..திணறும் இந்திய அணி News Lankasri
 
    
    சக்திக்கு வைத்த செக், தர்ஷனுக்கு ஷாக் கொடுத்த குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        