வேனை திருடி விற்பனை செய்து காதலியுடன் உல்லாசம்! காதலனுக்கு நேர்ந்த கதி
கண்டியில் வாகன விற்பனை நிலையத்தில் 7 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வேனை திருடி, மாத்தளை பல்லேபொலவில் உள்ள கடையில் 1.5 மில்லியன் ரூபாய்க்கு விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் அந்தப் பணத்தை பயன்படுத்தி ஒரு மோட்டார் சைக்கிள் கொள்வனவு செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் கைது
வாகன விற்பனை நிலையத்தின் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், தனது காதலியுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது, சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கண்டியில் உள்ள டி.எஸ். சேனநாயக்க வீதியில் உள்ள ஒரு உணவகத்தில் பணி புரியும் சந்தேக நபர், மாத்தளை மடிபொல பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவராகும்.
கடந்த 22 ஆம் திகதி இரவு கண்டியில் உள்ள டி.எஸ். சேனநாயக்க வீதியில் உள்ள வாகன விற்பனையகத்திற்குள் நுழைந்த சந்தேக நபர், ஆவணங்களுடன் டொயோட்டா நோவா வேனை திருடியதாக பொலிஸார் தெரிவித்துள்ளர்.
சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.



