பொகவந்தலாவையில் ஆணின் சடலம் மீட்பு
நுவரெலியா, பொகவந்தலாவை - கொட்டியாகலை பிரதேசத்தில் உள்ள கால்வாயிலிருந்து ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கொட்டியாகலை தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்கள் சிலர் இன்று (02.11.2024) சனிக்கிழமை கால்வாயில் சடலம் இருப்பதைக் கண்டு உடனடியாகப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
கொட்டியாகலை தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்கள் பயன்படுத்தும் குழாய்களுக்கு நீர் இணைப்பை வழங்கும் கால்வாயிலிருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை
சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என்று பொகவந்தலாவைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலமானது பிரேத பரிசோதனைக்காக திக்ஓயா ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri
