பொகவந்தலாவையில் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது
நுவரெலியா - பொகவந்தலாவை(bogawantalawa) பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சுகாதார அமைச்சினால் தடைசெய்யப்பட்ட என்.சி போதைப்பொருளை சிறிய பொதிகளில் அடைக்கப்பட்டு இளைஞர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்வதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கஞ்சா போதைப்பொருளை என்.சி போதைப்பொருளுடன் கலந்து விற்பனை செய்து வந்ததாக விசாரனைகளில் தெரியவந்துள்ளது.
1.850 கிலோகிராம் போதைப்பொருள்
இதன்போது சந்தேகநபரிடம் இருந்து 1.850 கிலோகிராம் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும், சந்தேக நபர் பொகவந்தலாவை, கொட்டியாகல தோட்டத்தை சேர்ந்தவர் எனவும், சந்தேக நபரை கைது செய்து சோதனையிட்ட போது, விற்பனைக்கு தயார் செய்யப்பட்ட போதைப்பொருளின் சிறிய பொதிகள் பலவற்றை உடலில் மறைத்து வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
