ரணிலை பின்தொடரும் அநுர! எதிர்க்கட்சியைக் கோரும் ராஜபக்சர்கள்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்(Ranil Wickremesinghe) பொருளாதார கொள்கையையே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) முன்னெடுக்கிறார். தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கி வாக்குறுதிகளுக்கு அப்பாற்பட்ட வகையில் தான் ஜனாதிபதி செயற்படுகிறார் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(Namal Rajpaksa) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அரசாங்கத்தை அநுர நிர்வகிக்கட்டும்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அரசியல் ரீதியில் பல சவால்களை எதிர்கொண்டுள்ளோம். ஜனாதிபதித் தேர்தலில் போது எம்முடன் இருந்தவர்கள் குறுகிய அரசியல் தேவைகளுக்காக எம்மை விட்டுச் சென்றார்கள். அவ்வாறு சென்றவர்கள் இன்று அரசியலில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளார்கள்.
பொதுத்தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் போட்டியிடவுள்ளோம். ராஜபக்சர்கள் நாட்டுக்கு சேவையாற்றியுள்ளார்கள். ஆகவே நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி பதவியை பொதுஜன பெரமுனவுக்கு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 1994 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களையும் விமர்சித்தார். ஆகவே இம்முறை அவர் அரசாங்கத்தை நிர்வகிக்கட்டும். அப்போது சொல்வது இலகு செய்வது கடினம் என்பதை அறிவார்.
ராஜபக்சர்கள் மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தே தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்தவுடன் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்தை மறுசீரமைப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
வாக்குறுதிகளுக்கு அப்பாற்பட்டு செயற்படும் ஜனாதிபதி
ஆனால் பதவியேற்று ஓரிரு நாட்களில் நாணய நிதியத்துடனான செயற்திட்டத்தை எவ்வித மாற்றமுமில்லாமல் தொடர்வதாக நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.
நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்காக கடுமையான தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதால் நடுத்தர மக்கள் பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். நடுத்தர மக்களின் நலனை கருத்திற் கொண்டு எவ்வித நடவடிக்கைகளையும் ஜனாதிபதி எடுக்கவில்லை.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார கொள்கையையே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னெடுக்கிறார். தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கி வாக்குறுதிகளுக்கு அப்பாற்பட்ட வகையில் தான் ஜனாதிபதி செயற்படுகிறார்.
பொதுத்தேர்தலுக்கு பின்னர் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக குறிப்பிடுவது மக்களை ஏமாற்றும் பிறிதொரு செயற்பாடாகும். வெறுப்பினை முன்னிலைப்படுத்தி கைப்பற்றிய ஆட்சியை சிறந்த முறையில் முன்கொண்டு செல்ல முடியாது என குறிப்பிட்டுள்ளார்.





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 15 மணி நேரம் முன்

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri

Vijay Television Awards: அதிக விருதுகளை தட்டிதூக்கிய சீரியல் எது தெரியமா.. வென்றவர்களின் லிஸ்ட் இதோ Cineulagam

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri
