சம்மாந்துறையில் சிகை அலங்கார கடையிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு!
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விளினையடி சந்தி பகுதியில் உள்ள சிகை அலங்கார கடையொன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலமானது இன்றையதினம் (15) மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
3 நாட்களுக்கு மேலாக இறந்த நிலையில் கதிரை ஒன்றில் அமர்ந்த நிலையிலேயே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
ஏறாவூர் பகுதியை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அத்தோடு, குறித்த நபர் வாடகைக்கு சிகை அலங்கார கடையை நடத்தி வந்தவர் என்றும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் இந்த நபர் சிகை அலங்கார கடை வேலைகளை முடித்து கடையறைக்குள் இரவு தூக்கத்தை கழிப்பவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் குறித்த சம்பவம் கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri

மலிவான வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் இந்திய அரசு.., எந்தெந்த வங்கிகள் தெரியுமா? News Lankasri

இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க Cineulagam
