யாழில் குளத்திலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு
யாழ். இந்திய துணை தூதரகத்திற்கு அண்மையில் உள்ள குளத்தில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
துவிச்சக்கரவண்டி மீட்பு
அவர் வெள்ளை, சிவப்பு மற்றும் கறுப்பு ஆகிய வர்ணங்கள் அடங்கிய சட்டையை அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் அவரது துவிச்சக்கரவண்டி குளத்திற்கு வெளியே காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சடலம் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விசாரணை முன்னெடுப்பு
மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.
சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சடலத்தை அடையாளம் காட்டுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அறிவுக்கரசி கையில் வீடியோ.. குணசேகரனை மாட்டி விடுவாரா! - எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு ப்ரோமோ Cineulagam
