யுவதி குளிப்பதை வீடியோ படமெடுத்த இளைஞன் விளக்கமறியலில்
கிணற்றில் குளித்துக்கொண்டிருந்த யுவதியின் அனுமதியின்றி வீடியோ பதிவு செய்த யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேசத்தை சேர்ந்த இளைஞனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் கடந்த 9 ஆம் திகதி உத்தரவிட்டுள்ளார்.
இளைஞனுக்கு பிணை வழங்க எவரும் இல்லை
இந்த இளைஞன் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி இளைஞனுக்கு பிணை வழங்குமாறு கோரிய போது, நீதவான் ஒரு லட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார்.
எனினும் இளைஞன் சார்பில் எவரும் பிணை வழங்கவில்லை என்பதால், அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
வீதியில் சென்ற போது யுவதி குளிப்பதை பார்த்து வீடியோ படமெடுத்த இளைஞன்
கோப்பாய் பிரதேசத்தில் உள்ள கிராமம் ஒன்றை சேர்ந்த இந்த இளைஞன் வீதியில் சென்றுக்கொண்டிருக்கும் போது, யுவதி ஒருவர் குளிப்பதை கண்டு, அதனை தனது அலைபேசியில் வீடியோ பதிவு செய்துள்ளார்.
இதனை கண்டு யுவதி சத்தமிட்டதை அடுத்து யுவதியின் உறவினர்கள் வந்து, இளைஞனை பிடித்து கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை நடத்தி இளைஞனை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.
கோப்பாய் பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 14 மணி நேரம் முன்

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam
