தீபாவளி தினத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை
நுவரெலியா- நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மரே தோட்டதில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தீபாவளி தினமான நேற்றையதினம்(08.11.2026) இரவு 11.30 மணியளவில் மரே தோட்டம், இல. 05 - புதுக்காடு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் இருவருக்கு இடையில் வாக்குவாதம் முற்றியதையடுத்து கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் மஸ்கெலியா, மரே தோட்டம், புதுக்காடு பிரிவைச் சேர்ந்த 27 வயதான ஜே. செல்வகுமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியவில்லை. சம்பவம் தொடர்பில் நல்லதண்ணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.