ஹயஸ் வான் மோதி மோட்டார் சைக்கிளில் பயணித்த முதியவர் உயிரிழப்பு
ஹயஸ் வான் - மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் முதியவர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் கொழும்பு - புத்தளம் பிரதான வீதியில் உள்ள புத்தளம், வென்னப்புவ - கொலிஞ்சடிய பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் கட்டுனேரியா பகுதியைச் சேர்ந்த 76 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.
மோட்டார்சைக்கிளுடன் மோதிய வான்
சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த வான் ஒன்று அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற முதியவர் பலத்த காயமடைந்து மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் என்று வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணை முன்னெடுப்பு
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
விபத்து தொடர்பில் வானின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




