தலவாக்கலை- பாமஸ்ரன் தோட்டத்தில் மின்னல் தாக்கி ஒருவர் பலி
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை பாமஸ்ரன் தோட்டத்தில் இடி மின்னல் தாக்கி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது இன்று(03.10.2026) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
தலவாக்கலை பாமஸ்ரன் பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பு
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இன்று பிற்பகல் தலவாக்கலை பாமஸ்ரன் தோட்டப் பகுதிகளில் பலத்த இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது.
இதன் போது நான்கு பேர் இணைந்து வீடு ஒன்றில் இருந்த போது எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக் கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.