கல்கிஸையில் சைக்கிளில் சென்ற முதியவருக்கு நேர்ந்த சோகம்
கொழும்பு, கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொளுமடம - பொருபன வீதியில், பொருபன இரும்புப் பாலத்துக்கு அருகில் பொருபன நோக்கிப் பயணித்த லொறி ஒன்று, முன்னால் சென்று கொண்டிருந்த சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று(2) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சைக்கிள் செலுத்துநர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய முதியவராவார்.

இந்த விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து கல்கிஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.