“ஜெய் ஸ்ரீராம்” கோஷத்துடன் துப்பாக்கி சூடு! - ஒருவர் பலி
இந்திய மத்தியப் பிரதேசத்தில் கொலை குற்றத்துக்கு உள்ளாகியுள்ள சாமியார் ராம்பாலின் சீடர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமண விழாவில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் ஒருவர் மரணமானார்.
கொலைக் குற்றச்சாட்டில் ராம்பால் தற்போது ஆயுள் தண்டனையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் அவரது பெயரால் நடத்தப்படும் திருமணம் இந்து மதத்திற்கு எதிரானது என ஒரு சாரார் வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கு மத்தியில் போபால் நகரில் ராம்பாலின் சீடர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமண விழாவில் புகுந்த சிலர் “ஜெய் ஸ்ரீராம்” என்று கோஷமிட்டபடி துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளனர்..
இதன்போது ஒருவர் உயிரிழந்தார்.
சம்பவம் தொடா்பில் 11 பேரை பொலிஸார் தேடி வருகின்றனர்.