விருந்தில் ஏற்பட்ட விபரீதம் - கொடூரமாக கொலை செய்யப்பட்ட நபர்
அனுராதபுரம், கெக்கிராவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டல்பத்த பகுதியில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அங்கு உள்ள வீடொன்றில் இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் 56 வயதுடைய நபர் என தெரிவிக்கப்படுகிறது.
கொலை செய்யப்பட்ட நபர்
குறித்த நபரின் வீட்டில் இடம்பெற்ற விருந்தொன்றின் போது, அயல்வீட்டில் வசிக்கும் ஒருவருடன் ஏற்பட்ட தகராறு முற்றியுள்ளது.
இந்த நிலையில், இன்று அதிகாலை அயல்வீட்டு நபர் கூரிய ஆயுதத்தால் அவரைத் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலில் படுகாயமடைந்த நபர் கவலைக்கிடமான நிலையில் இருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தை மேற்கொண்ட சந்தேகநபர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபரை கைது செய்வதற்காக கெக்கிராவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இலங்கை வரலாற்றில் தண்டனைப் பெறப் போகும் முதலாவது முன்னாள் ஜனாதிபதி ரணிலாம்.. தப்பிப்பதற்கு பெரும் சதி!
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri