பேஸ்புக் பதிவால் பறிபோன இளம் தந்தையின் உயிர்
தொடம்கொட பிரதேசத்தில் வீடு புகுந்து நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக பேஸ்புக்கில் விளம்பரம் செய்த சம்பவம் காரணமாக போதைப்பொருள் வியாபாரி உள்ளிட்ட குழுவினர் கூரிய ஆயுதங்களுடன் தொலலந்த பிரதேசத்தில் வீடொன்றிற்குள் புகுந்து ஒருவரைக் கொன்றுவிட்டு தப்பி ஓடியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்டவர் 37 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான திமுத் சாமிக்க என்ற தொடங்கொட தொலலந்த பிரதேசத்தில் வசித்து வந்தவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மதுபான விருந்து
கொல்லப்பட்ட நபர் நேற்று முன்தினம் தனது வீட்டிற்கு அருகில் மதுபான விருந்துக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் போது வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த போதைப்பொருள் வியாபாரி மற்றும் குழுவினர் கூரிய ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொல்லப்பட்டவர் மத்துகம ஷான் என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் கும்பலைச் சேர்ந்தவர் எனவும், போதைப்பொருள் கடத்தல் கும்பலில் இருந்து விலகியவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸ் அதிகாரி
போதைப்பொருள் கடத்தல் கிராமத்திற்கு தலைவலி என கொலைசெய்யப்பட்ட நபர் பேஸ்புக்கில் விளம்பரம் செய்ததன் காரணமாகவே இக்கொலை நடந்துள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சில தினங்களுக்கு முன்னர், கொலைசெய்யப்பட்ட நபர் தொடம்கொட பொலிஸ் நிலையத்திற்கு வந்த வீடு திரும்பும் போது, போதைப்பொருள் கும்பலை சேர்ந்தவர்கள் அவரை அடித்து, பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதியில் விட்டு சென்றிருந்ததாக பொாலிஸார் தெரிவித்துள்ளனர்.