வவுனியாவில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு
வவுனியா மாவட்டம் நெடுங்கேணி வடக்கு பெரியமடு நெடுங்கேணி பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதியில் காட்டுயானை தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று(04.11.2026) மாலை 1.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை
சம்பவத்தில் பெரியமடு நெடுங்கேணியினை சேர்ந்த குடும்பஸ்தரான சிவஞானசுந்தரம் கருணன்(கண்ணன்) 45வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பெரியமடு பகுதியில் உள்ள வயல் நிலப்பகுதியில் சென்ற வேளை காட்டு யானைதாக்கியுள்ளது. இதன்போது காயமடைந்த குறித்த நபர் அயலில் உள்ள விவசாயிகளால் மீட்கப்பட்டு வவுனியா மாவட்ட மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்ட போது அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் நெடுங்கேணி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.