கடைக்குள் நுழைந்தவரை கொடூரமாக அடித்துக் கொலை செய்த நபர்
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவின் பெரியமுல்ல பகுதியில் நேற்று பிற்பகல் நடந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
டெல்மார்வத்தை பகுதியை சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொலை செய்யப்பட்ட நபர் பெரியமுல்ல பகுதியில் உள்ள ஒரு கடையில் பணிபுரிந்து வந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மற்றுமொரு நபருடன் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொடூரமாக அடித்துக் கொலை
கடைக்குள் நுழைந்து அங்கு பணிபுரிந்த நபரை கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உடல் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.



