வயோதிப பெண்ணின் மர்ம மரணம்: விசாரணையில் இளம் இளைஞன் கைது

Colombo Sri Lanka Police Investigation
By Dharu Dec 03, 2023 06:35 PM GMT
Report

கொழுப்பில் பெண் சமூக சேவகர் ஒருவரை கொலை செய்த 18 வயது இளைஞன் ஒருவரை கல்கிஸ்ஸை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொழும்பு - மொரட்டுவை, இந்திபெத்த பிரதேசத்தில் தனியாக வசித்து வந்த 83 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் தலையில் தாக்கப்பட்டதன் காரணமாக அவரது வீட்டின் அறையில் இரத்தம் கசிந்து உயிரிழந்துள்ளதாக கடந்த நவம்பர் மாதம் 29 ஆம் திகதி மொரட்டுமுல்லை பொலிஸாருக்கு அப்பகுதி மக்களிடமிருந்து தகவல் கிடைத்துள்ளது.

உலகம் முழுவதும் ஹமாஸை தேடித்தேடி வேட்டையாட தயாராகும் இஸ்ரேலின் புலனாய்வுப் பிரிவுகள் (Video)

உலகம் முழுவதும் ஹமாஸை தேடித்தேடி வேட்டையாட தயாராகும் இஸ்ரேலின் புலனாய்வுப் பிரிவுகள் (Video)

சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை

இதனடிப்படையில், கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கண்டுபிடிப்பதற்காக கல்கிஸ்ஸை குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

மேலும் அவரது வீட்டுக்கு அருகில் வசித்து வரும் இங்கிலாந்து குடியுரிமை பெற்ற சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் இளைஞர் மற்றும் அவரது பாட்டியிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

வயோதிப பெண்ணின் மர்ம மரணம்: விசாரணையில் இளம் இளைஞன் கைது | Man Killed An Elderly Woman For Money

இதன்போது, குறித்த இளைஞன் கடந்த 27ஆம் திகதி இரண்டு தடவைகள் உயிரிழந்த பெண்ணின் வீட்டிற்கு தனது பாட்டியுடன் தவறவிடப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்ப்பதற்காகவும், கையடக்க தொலைபேசியின் பழுதை சரிசெய்வதற்காகவும் சென்றதாக தெரிவித்திருந்தனர்.

எனினும் ஒரு முறை தான் அந்த வீட்டிற்கு சென்றதாக பாட்டி கூறியுள்ளார். இதன்படி, சந்தேகத்தின் அடிப்படையில் 18 வயதுடைய இளைஞனைக் கைது செய்து விசாரணைக்குட்படுத்திய போது, ​​சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்திய சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி

இந்திய சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி

இளைஞன் வாக்குமூலம்

பாட்டியுடன் வீட்டுக்குச் சென்றபோது, ​​மேசையில் இருந்த பணப்பையில் 5,000 ரூபாய் தாள்கள் இருப்பதைக் கண்டதாகவும், மறுநாள் சமையலறையிலிருந்து வீட்டிற்குச் சென்று பெண்ணிடம் தண்ணீர் கேட்டதாகவும் சந்தேக நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதன் பின்னர் தண்ணீர் குவளையை எடுத்து வரச் சென்றபோது, ​​அந்த இளைஞன் தனது காற்சட்டை பையில் சில பணத்தாளினை வைத்து கொண்டிருப்பதை அந்த வீட்டுப் பெண் பார்த்துள்ளார்.

வயோதிப பெண்ணின் மர்ம மரணம்: விசாரணையில் இளம் இளைஞன் கைது | Man Killed An Elderly Woman For Money

இரத்த தானத்திற்காக உள்ளூர் மக்களிடமிருந்து உரிய பணம் சேகரிக்கப்பட்டதாகவும், சம்பவம் குறித்து பாட்டியிடம் தெரிவிப்பதாகவும் அந்தப் பெண் அந்த இளைஞனிடம் கூறியுள்ளார்.

இதன்போது இளைஞன், அந்தப் பெண்ணை தள்ளிவிட்டதால் சுவரில் மோதி தரையில் விழுந்துள்ளார். பின்னர் சமையல் அறைக்கு ஓடிச்சென்று அலவாங்கினை எடுத்து வந்து அந்த பெண்ணின் தலையில் இரண்டு முறை தாக்கியதாக இளைஞன் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அதன் பின்னர் அலவாங்கினை கழுவி சுத்தம் செய்து, அந்த பெண்ணின் கையடக்க தொலைபேசியை எடுத்துக்கொண்டு சந்தேநபர் வீட்டுக்கு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் சந்தேகநபர் மொரட்டுவையில் உள்ள கையடக்கத் தொலைபேசி கடையொன்றில் அந்த கையடக்கத் தொலைபேசியை மாற்றிக் கொண்டு திருடப்பட்ட பணத்தில் உடற்கட்டமைப்புக்கு தேவையான விட்டமின்களை வாங்கியுள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உடற்கட்டமைப்பு போட்டியில் கலந்துகொள்ள சந்தேகநபரான இளைஞர் தயாராக இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வரலாற்றில் முதன்முறையாக பதிவான 9ஏ சித்திகள்: கிளிநொச்சியில் மாணவியின் சாதனை

வரலாற்றில் முதன்முறையாக பதிவான 9ஏ சித்திகள்: கிளிநொச்சியில் மாணவியின் சாதனை

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US