ரயிலில் மோதுண்டு இளைஞரொருவர் பரிதாபமாக பலி
கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த ரயிலில் மோதி இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று (07) மாலை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு ரயிலில் மோதி விபத்துக்குள்ளானவர் முள்ளிப்பொத்தானை 95ஆம் கட்டை சதாம் நகரை சேர்ந்த, ஹமீத் முபீத் (20வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான நபர் தொலைபேசியில் ஹெட்போன் அணிந்தவாறு பேசிக்கொண்டிருந்ததாகவும்,சக நண்பர்கள் புகையிரதம் வருவதை அவதானித்து கூச்சலிட்டதாகவும் ஹெட்போன் அணிந்திருந்தமையினால் அவருக்கு சரியாக கேட்காத நிலையில் இருவரும் அவரை நோக்கி ஓடிய போதும் ரயில் வேகமாக அவரை மோதியதாகவும் சக நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் விபத்துக்குள்ளானவரின் தலை துண்டிக்கபட்ட நிலையில் சடலம் கந்தளாய் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
