கம்பஹாவில் தொடருந்து மோதி ஒருவர் பரிதாப மரணம்
கம்பஹாவில் மோட்டார் சைக்கிள் மீது தொடருந்து மோதிய விபத்தில் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நீர்கொழும்பு- கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லுர்து மாவத்தை நோக்கிச் செல்லும் வீதியில் உள்ள தொடருந்து மார்க்கத்தில் நேற்று( 5) இடம்பெற்றுள்ளது.
நீர்கொழும்பு, பெரியமுல்ல பள்ளி வீதியைச் சேர்ந்த 61 வயதுடைய நபரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் தொடருந்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றொரு நபர் பலத்த காயங்களுடன் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கொச்சிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 17 மணி நேரம் முன்

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்.. கடை திறப்பு விழாவில் அதிர்ச்சி! வைரல் வீடியோ Cineulagam

அக்டோபர் 12 முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஏற்படும் மாற்றம்: பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை News Lankasri
