படுகொலையின் பிரதான சூத்திரதாரி செவ்வந்தியா..! சட்ட ரீதியாக எடுக்கப்படவுள்ள நடவடிக்கை
பாதாள உலக குழுவின் தலைவர்களில் ஒருவரான கணேமுல்ல சஞ்சீவ படுகொலையின் பிரதான சந்தேக நபராக இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எனினும் குறித்த பெண் உண்மையில் தேடும் செவ்வந்தியா என்பது தொடர்பில் சந்தேகம் நீடித்து வரும் நிலையில், முகத்தை அடையாளம் காணும் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
இவ்வாறான நிலையில் அரச இரசாயன பகுப்பாய்வாளர் மூலம் செவ்வந்தியை அடையாளம் காண பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கொழும்பு குற்றப்பிரிவு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு
குறித்த வழக்கு நேற்று கொழும்பு மேலதிக நீதவான் லியான் வருஷவிதான முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, சந்தேக நபரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் லியான் வருக்குவிதாரண உத்தரவு பிறப்பித்தார்.
சுமார் 09 மாதங்கள் கொழும்பு குற்றப்பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்ட சந்தேக நபர் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
சிறப்பு முகம் அடையாளம்
இதன்போது பொலிஸார் சமர்ப்பித்த விடயங்களை பரிசீலித்த பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதவான் அரச இரசாயன பகுப்பாய்வாளர் முன்னிலையில் சிறப்பு முகம் அடையாளம் காணும் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கும் அனுமதி வழங்கினார்.
YOU MAY LIKE THIS VIDEO..
பிரபல தொகுப்பாளினியை காதலிக்கும் லப்பர் பந்து புகழ் நடிகர் தினேஷ்... வெளிவந்த ஜோடியின் போட்டோஸ்... Cineulagam
அட்டகத்தி தினேஷின் காதலி இவர்தானா? ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய பிரபல தொகுப்பாளினியின் பதிவு! Manithan