நாட்டின் சில பகுதிகளில் இன்றிரவு இடியுடன் கூடிய மழை!
நாட்டின் சில பகுதிகளில் இன்று (6) இரவு வேளையில் மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் குறிப்பிட்டுள்ளது.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில பகுதிகளுக்கு மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணிக்கு சுமார் 40-50 கிலோமீற்றர் வேகத்தில் மிதமான காற்று வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
காவேரி உயிருடன் இருக்கும் விஷயத்தை அறியும் விஜய், ஷாக்கான குடும்பம்.. மகாநதி சீரியல் புதிய புரொமோ Cineulagam