நானுஓயாவில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற வான் சாரதி மீது குளவித் தாக்குதல்
நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் இன்று (06) பிற்பகல் ஒரு மணியளவில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற வான் சாரதியை குளவி தாக்கியுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பிலிருந்து நுவரெலியாவுக்கு நான்கு இந்திய சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற போது, நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் சுற்றுலாப் பயணிகள் வானில் இருந்து இறங்கி புகைப்படம் எடுத்துள்ளனர்.
குளவி கொட்டு
இதன்போது வீதியோரத்தில் அருகில் ஒரு மரத்தில் கட்டப்பட்டிருந்த குளவி கூடு கலைந்து சுற்றுலா பயணிகளை துரத்தியபோது அவர்களை பாதுகாப்பாக வானில் ஏற்றிய சாரதி இறுதியாக வாகனத்தில் ஏறும் போது குளவி கொட்டுக்கு இலக்கானதாக நானுஓயா பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்த உடனே நானுஓயா பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று சம்பவ இடத்தை ஆய்வு செய்துள்ளனர்.
எடுக்கப்பட்ட நடவடிக்கை
இதன்பின்னர் குளவித் தாக்குதலுக்கு உள்ளான சாரதி தனது உடல்நிலை மோசமாக இல்லை என்றும், சிகிச்சைக்காக நுவரெலியாவுக்குச் செல்வதாகவும் கூறியதை அடுத்து, நானுஓயா பொலிஸார் இந்திய நாட்டினர் குழுவை அதே வானில் நுவரெலியா வரை பொலிஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சொதப்பிய மெஸ்ஸி: கடைசி நிமிடங்களில் மேஜிக்.. சுவிஸை வீழ்த்தி அர்ஜென்டினா அரையிறுதிக்கு முன்னேற்றம் News Lankasri
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan
செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை... அதிர்ஷ்டத்தினை அள்ளிச் செல்லும் ராசியினர் யார்னு தெரியுமா? Manithan