கந்தளாய் குளத்தில் மீன்பிடிக்க சென்றவர் மாயம்
கந்தளாய் குளத்திற்கு மீன்பிடிக்க சென்ற குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த குடும்பஸ்தர் நேற்று(5) காணாமல் போயுள்ள நிலையில் அவரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 87ஆம் கட்ட பழுகஸ் கிராமத்தைச் சேர்ந்தவரும், இரண்டு பிள்ளைகளின் தந்தையுமான மது சஞ்ஞய குமார், நேற்று மாலை இருவருடன் மீன்பிடிக்க சென்றுள்ளார்.
மேலதிக விசாரணை
குறித்த நபர்களில் இருவர் மட்டுமே வீடு திரும்பியுள்ள நிலையில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
இந்தநிலையில், காணாமல் போனவர் குறித்து உறவினர்கள் அளித்த முறைப்பாட்டின் பேரில், அக்போபுர பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், சந்தேகத்தின் பேரில் இருவர் அக்போபுர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 5 மணி நேரம் முன்

உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam

பிரித்தானியாவின் 23 பகுதிகளை குறிவைத்திருக்கும் ரஷ்யா... வெளியான வரைபடத்தால் அதிர்ச்சி News Lankasri
