வட மாகாண கல்வி அமைச்சினால் 22 வருடங்களாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்
வட மாகாண கல்வி அமைச்சினால் கடந்த 22 வருடங்களாக பாதிக்கப்பட்ட மன்னரைச் சேர்ந்த ஆசிரியர் எச்.எம். தஸ்லீம் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு தீர்வை பெற்றுத்தர கோரி பிரதமருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,
எச்.எம். தஸ்லீம்ஆகிய நான் 1999/11/11 திகதி கல்விச் சேவை குழுவினால் வடக்கு கிழக்கு மாகாண பாடசாலைகளில் தமிழ் மொழி மூலம் தகுதி கான் ஆசிரிய வெற்றிடங்களுக்கு (கைப்பணி ஆசிரியர்) பதவிக்கு விண்ணப்பித்தேன்.
ஆசிரிய நியமனங்கள்
அதற்கிணங்க 2000/08/15 திகதி நேர்முகப் பரீட்சை நடைபெற்றது. சில மாதங்களின் பின் ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட்ட போது எனக்கு நியமனம் கிடைக்கவில்லை.
இதுபற்றி வடக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் வினவியபோது என்னால் சமர்பிக்கப்பட்ட தொழில்நுட்ப மரவேலை பாட சான்றிதழ் ஏற்புடையது இல்லை என கூறப்பட்டது. அதற்கு நான் மீண்டும் மேன்முறையீடு செய்தேன்.
பின்னர் சான்றிதழ் ஏற்புடைமை பற்றி வடக்கு கிழக்கு மாகாண அமைச்சின் செயலாளர் 8/1/02/02/24 இலக்கம் 2000/05/08 திகதி கடிதம் மூலம் கல்வி செயலாளர் கல்வி உயர்கல்வி அமைச்சு அவர்களின் வழி காட்டலைக் கேட்டு கோரியிருந்தார்.
இக் கோரிக்கைக்கு அமைவாக கல்வி உயர்கல்வி அமைச்சின் ED/1/17/4/75/11 இலக்கம் 2008/03/05ம் திகதி கடிதத்தின் மூலம் தொழில் நுட்ப சான்றிதழ் ஆசிரிய நியமனத்துக்கு ஏற்றுக் கொள்ளலாம் என கல்வி உயர் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
ஆனல் கல்வி உயர் கல்வி அமைச்சின் பதிலுக்கு நின்றார். மீண்டும் வட மாகாணம் இந்த நியமனம் தொடர்பான நடவடிக்கைகள் யாவும் முடிவுறுத்தப்பட்டு விட்டது என்பதை மனவருத்ததுடன் அறியத் தருகின்றேன் என NP/3/2/6/19-COMP/MN இலக்கம் 2009/05/06 திகதி கடிதம் மூலம் வடமாகாண கல்வி அமைச்சு தெரிவித்து உள்ளது.
நேர்முகப்பரீட்சை
இது இவ்வாறு இருக்க நான் 2004 ஆம் ஆண்டிலிருந்து மன்/புனித லூசியா மகா வித்தியாலயத்தில் யுத்த காலத்தில் தொண்டராசிரியராக கடமையாற்றிக் கொண்டிருந்தேன்.
அப்போது கல்வி அமைச்சின் ED/2/29/4/1/47 sub இலக்கம் 2007/09/27 ஆம் திகதி கடிதத்திற்கு அமைப்பாகவும் வடமாகாண ஆளுநர் பணிப்புரைக்கு அமைப்பாகவும் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைதீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களிலுள்ள மாகாண சேவையாற்றிய தொண்டராசிரியர்கள் நேர்முகப்பரீட்சைக்கு உள்வாங்கி தகுதியானவர்களுக்கு ஆசிரிய உதவியாளர் நியமனம் வழங்கப்பட்டது.
ஆனால் மன்/புனித லூசியா மகாவித்தியாலயத்தில் 2004ம் ஆண்டு தொண்டராசிரியராக இருந்த என்னை நேர்முகப்பரீட்சை க்கு அழைக்கப்படவில்லை.
இது பற்றி மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் ஊடாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு 2010/06/14 ம் திகதி மேன்முறையீடு செய்தேன்.
கல்வி அமைச்சு
இதற்கு அமைவாக இரண்டு வருடத்துக்கு பின் 2010/07/03ம் திகதியிடப்பட்ட கடிதம் மூலம் நேர்முகப்பரீட்சை இல்லாமல் ஆசிரிய உதவியாளர் நியமனம் எனக்கு வழங்கப்பட்டது.
2007ம் ஆண்டு ED/2/29/4/1/47 sub இலக்கம் இடப்பட்ட சுற்றறிக்கையில் 4ம் பந்தியில் இனிவரும் காலங்களிலா தொண்டராசிரியராகளை சைவைகளில் ஈடுபடுத்துவதை அனுமதிக்கப்பட மாட்டாது என்று கல்வி அமைச்சு அறிவுறுத்தல் வழங்கியது.
ஆனால் அதே சந்தர்பத்தில் 2007ம் ஆண்டு வடமாகாணத்தில் தொண்டராசிரியர்களாக இருந்த சிலருக்கு நேர்முகப்பரீட்சை நடைபெற்றறு ஆனால் எதோ காரணத்தால் ஆசிரிய உதவியாளர் நியமனம் வழங்கப்படவில்லை இவர்கள் பல போராட்டங்களுக்கு பின் மீண்டும் இவர்களுக்கு நேர்முகப்பரீட்சை நடத்தி 2018/03/28 - 2018/07/22 திகதிகளில் ஆசிரிய உதவியாளருக்கு பதிலாக 2007ம் ஆண்டு சுற்றறிக்கை க்கு முரணாக 3 -2 ஆசிரிய நியமனம் வழங்கப்பட்டது.
பிரதமர் அவர்களே மேலே எனக்கு வழங்கப்பட்ட ஆசிரிய உதவியாளராக நியமனம் 5 வருட காலம் பகுதியில் நியமன நிபந்தனையாக ஆசிரிய பயிற்சி கலாசாலையில் பயிற்சியை முடிக்காத காரணத்தலும் கொவிட் 19 தொற்று காலத்தில் பாடசாலைக்கு 2021/01/11 திகதி முதல் 2021/02/23 திகதி வரைசமுகமளிக்காத காரணத்தால் பதவி வெறி தாக்கல் NP/42/20/1/1/3 இலக்க கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
உரிய தீர்வு
ஆனால் நான் 2021/02/01 திகதி வழமைபோல் மன்/புனித லூசியா மகா. வித்தியாலயத்தில் கடைக்குச் சென்றேன்.
அன்று மதியம் வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்களின் தொலைபேசி எண் மூலம் அதிபருக்கு இனி தஸ்லீம் கடமைக்கு அனுமதிக்க வேண்டாம் என்று வலயக் கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார் என அதிபர் எனக்கு அதனை அறிவித்தார்.
அன்றைய பிரதமருக்கு எனக்கு 1999ம் ஆண்டு தொடக்கம் 2021/02/23 வரை எனக்கு இழைக்கப்பட்ட அநீதி சம்பந்தமாக பல மேன்முறையீடு செய்துள்ளேன் .
ஆனால் அநீதிக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை . பிரதமர் அவர்களே நீங்கள் நியாயமும் அநீதிக்கெதிராக செயல்படுபவர்.
ஆகையால் தயவு செய்து என்னை நேரடியாக அழைத்து விசாரனைக் குட்டுத்தி நியாயமான தீர்வொன்றை தந்துதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.







பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
