யாழ்.கிளானையில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம்-கிளானையில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்று(31) இடம்பெற்றுள்ளது.
தெல்லிப்பழை - தும்பளையைச் சேர்ந்த குணரத்தினம் சிவகுமார் (வயது 64) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பு
இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் கிளானை பகுதியில் தோட்டம் செய்கின்றார். இவர் சகோதரியின் வீட்டில் இருந்தே தோட்ட வேலைகளில் ஈடுபட்டு வருகின்றார்.

பன்றியிடம் இருந்து தனது மரவள்ளி தோட்டத்தை பாதுகாப்பதற்காக மின்சார வேலி அமைத்துள்ளார்.
உடற்கூற்று பரிசோதனை
இந்தநிலையில், மின்சார இணைப்பு நிறுத்தப்பட்டதாக நினைத்து வேலியில் கை வைத்தவேளை அவரை மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam