யாழில் பாடசாலை மாணவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!
யாழில் மனவிரக்தியில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
இடைக்காடு - அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த கேதீஸ்வரன் சுபானு (வயது 16) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த மாணவியின் தந்தை நீண்ட காலமாக மனைவியை பிரிந்திருந்த நிலையில் மாணவி தாயாருடனே வசித்து வந்தார்.
உயிர்மாய்ப்பு
இந்நிலையில் கடந்த 25ஆம் திகதி தவறான முடிவெடுத்து தனக்கு தானே மண்ணெண்ணெயை ஊற்றி தீ மூட்டியுள்ளார்.

இந்நிலையில் சிகிச்சைக்காக அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
மரண விசாரணை
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். சாட்சிகளை அச்சுவேலி பொலிஸார் நெறிப்படுத்தினர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
காயத்ரி பிரச்சனை முடிந்ததும் சோழனை தனியாக அழைத்துச்சென்று நிலா சொன்ன விஷயம்... அய்யனார் துணை சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam
அறிவுக்கரசி வீடியோவாக காட்டிய விஷயம், கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு News Lankasri