யாழில் இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம்- புன்னாலைக் கட்டுவான் வடக்கு சந்திக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது நேற்று (12) அதிகாலை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் பலாலி கிழக்கு, பலாலியைச் சேர்ந்த கந்தவனம் செல்வநாயகம் (வயது- 62) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பேராதெனியா பல்கலைக்கழகத்திலிருந்து புத்தாண்டு விடுமுறைக்காக யாழ்ப்பாணத்துக்கு பேருந்தில் வருகை தந்த மகளை அழைத்து செல்வதற்காக அதிகாலை பலாலியில் உள்ள தனது வீட்டில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

இதன்போது, மழை பெய்து கொண்டிருந்த நிலையில் பழுதடைந்து வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திர பெட்டியுடன் மோதுண்டு அவர் உயிரிழந்துள்ளார்.
மேலும், விபத்து தொடர்பில் உழவு இயந்திர சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri