காதலியை பார்க்க சென்ற இளைஞனுக்கு நேர்ந்த சோகம்
பண்டாரகம - கம்மன்பில குளத்திற்கு அருகில் மோட்டார் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் உயிரிழந்தவர் 26 வயதுடைய அகில சந்தீப என்ற இளைஞன் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
உயிரிழந்த இளைஞன் பண்டாரகம, வெவிட்ட பகுதியில் உள்ள தனது காதலியின் வீட்டிற்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்துக்கான காரணம்
இதன்போது, மோட்டார் வாகனம் சாலையை விட்டு விலகி, மின் கம்பத்தில் மோதி சுமார் 15 அடி சரிவில் கவிழ்ந்துள்ள நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, அப்பகுதியினரால் இளைஞன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் விபத்து ஏற்பட்டு சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளமை தெரிய வந்துள்ளது.
குறித்த நபர் நாளை (17) தனது வேலை தொடர்பாக தனியார் பல்கலைக்கழம் ஒன்றில் இறுதித் தேர்வை எழுதவிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan

கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam
