கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கையர் ஒருவர் கைது
சட்டவிரோதமான முறையில் சிகரெட்டுகளை இலங்கைக்கு எடுத்து வந்த நபரொருவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின்(Bandaranaike International Airport) பொலிஸ் போதைப் பொருள்தடுப்பு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் பிரகாரம் குறித்த நபர் சோதனையிடப்பட்டுள்ளார்.
ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதி
அதன் போது அவரிடம் இருந்து சுமார் ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. துபாயில் இருந்து அவர் குறித்த சிகரெட்டுக்களை சூட்சுமமான முறையில் மறைத்து இலங்கைக்கு கொண்டு வந்துள்ளார்.
அதனையடுத்து அவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான இளைஞன் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

இந்தியாவின் தக்க பதிலடி... துருக்கி, அஜர்பைஜானுக்கு பறக்கும் பாகிஸ்தான் பிரதமர்: அவரது திட்டம் இதுதான் News Lankasri
