தாக்குதலை தடுக்க சென்ற நபர் அடித்துக் கொலை
குருநாகல் மாவத்தகம, வெஉட பகுதியில் நேற்று இரவு இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தடி மற்றும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதாகவும், அவர் பலத்த காயமடைந்து மாவத்தகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் வெஉட பகுதியை சேர்ந்த 45 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
குழு மோதல்
தற்போது நடைபெற்று வரும் விசாரணையில், உயிரிழந்தவரின் வீட்டிற்கு அருகே ஒரு முதியவரை தாக்க ஒரு குழு கூடியபோது, உயிரிழந்தவர் தனது மகனுடன் அதைத் தடுக்கச் சென்றுள்ளார்.

அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்து, அந்தக் குழுவில் இருந்த பலர் தாக்குதல் நடத்தி காப்பாற்ற வந்தவரை கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பிரேத அறை
உயிரிழந்தவரின் சடலம் மாவத்தகம மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மாவத்தகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் தொடரும் மர்மம் - தனியார் வைத்தியசாலையின் செவிலியர் வழங்கிய வாக்குமூலம்
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam