அர்ச்சுனா எம்.பியால் தாக்குதலுக்கு உள்ளான நபர் - யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதி
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் தாக்குதலுக்குள்ளான இரு நபர்களில் பெண்ணொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில், மற்றைய நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் ஒரு தரப்பினருக்கும் இடையே நேற்றுமுன்தினம்(25) யாழ்ப்பாணம் - பெரியவிளான் பகுதியில் இடம்பெற்ற முரண்பாட்டின்போதே நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா காலால் உதைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்
இந்நிலையில், பாதிக்கப்பட்ட நபர் நேற்றையதினம்(26.04.2026) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்றையதினம்(27) இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் இன்றையதினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 16 மணி நேரம் முன்
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri