பொலிஸாரின் திடீர் நடவடிக்கையில் பல ஆவணங்களுடன் சிக்கிய நபர்
அம்பாறையில் பல ஆவணங்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பக்கியெல்ல கன்னியம்பா பகுதியில் 04 கிராம் 100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவால் நடத்தப்பட்ட சோதனையின் போது அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாட்டு கடவுச்சீட்டு
சந்தேக நபரிடம் இருந்து வெவ்வேறு பெயர்களை கொண்ட 04 தேசிய அடையாள அட்டைகள், 02 வெளிநாட்டு கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், 02 பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் கிராம சேவையாளர் சான்றிதழ் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
அந்த நபர் அடையாள அட்டைகள் மற்றும் வெவ்வேறு பெயர்களைக் கொண்ட வெளிநாட்டு கடவுச்சீட்டுகளுடன் பல இடங்களில் சேவைகளை பெற்றுள்ளமையும் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் ஏதேனும் குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து பக்கியெல்ல பொலிஸார் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 6 மணி நேரம் முன்

30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri
