ஒல்லாந்தர் காலத்து கேடயத்துடன் ஹட்டனில் ஒருவர் கைது
ஒல்லாந்தர் காலத்து VOC எழுத்து பொறிக்கப்பட்ட கேடயம் மற்றும் இரண்டு நாணயங்களை விற்பனை செய்ய வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
20 இலட்சம் ரூபாவுக்கு ஒல்லாந்தர் காலத்தைச் சேர்ந்த கேடயம் மற்றும் இரண்டு நாணயங்களை விற்பனை செய்ய வந்த நபரை ஹட்டன் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
கினிகத்தேனை பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேக நபர், ஹட்டன் பிரதேசத்தில் உள்ள ஒருவருக்கு 20 இலட்சம் ரூபாவிற்கு VOC கேடயம் மற்றும் இரண்டு நாணயங்களை விற்பனை செய்ய வந்துள்ளார்.

சந்தேகநபருக்கு கேடயம் மற்றும் இரண்டு நாணயங்கள் எவ்வாறு கிடைத்தன என்பது குறித்து சந்தேகநபர் எதுவும் கூறவில்லை எனவும், குறித்த நாணயம் மற்றும் கேடயம் தொடர்பான, தொல்பொருள் பெறுமதியை உறுதிப்படுத்துவதற்காக தொல்பொருள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஹட்டன் தலைமை பொலிஸ் பரிசோதகர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
VOC என்பது ஒல்லாந்தர் கால "கிழக்கிந்திய கம்பனி" எனும் பெயரைக் குறிக்கும் சுருக்கக் குறியீடாகும். இந் நாணயம் 1732 ஆம் ஆண்டு பொறிக்கப்பட்டுள்ளது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 22 மணி நேரம் முன்
குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான், ஜனனி சமாளிப்பாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan
H-1B விசா வைத்துள்ளோருக்கு விரைவு பாதையை திறந்த கனடா.,1.7 பில்லியன் டொலர் திட்டம் அறிவிப்பு News Lankasri
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam