அரச ஊழியர்களை ஏமாற்றிய அநுர அரசாங்கம்! சம்பள அதிகரிப்புக்கு இடமில்லை
தேசிய மக்கள் சக்தியை ஆட்சிக்கு கொண்டு வர பெரும் பங்களிப்பைச் செய்த அரச ஊழியர்களை ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த அரசாங்கம் ஏமாற்றியுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றையதினம்(16) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வாக்குறுதிகளை மீறிய அநுர
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நல்லாட்சியின் போது நாம் வழங்கிய அனைத்து வாக்குறுதிகளையும் 100 நாட்களுக்குள் எம்மால் நிறைவேற்ற முடிந்தது. ஆனால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தேர்தலுக்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக மீறிக் கொண்டிருக்கின்றார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் பயணித்து முன்னேறிய நாடு இல்லை என்று அவர் தேர்தலுக்கு முன்னர் கூறினார். அதே போன்று அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை.
கடந்த அரசாங்கத்தில் அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தையும் இந்த அரசாங்கம் இரத்துச் செய்துள்ளது. இதனால் அரச உத்தியோகத்தர்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள்.
வரியைக் குறைப்பதாகக் கூறியதையும் நடைமுறைப்படுத்தவில்லை. எனவே பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களிக்குமாறு மக்களை கேட்டுக் கொள்கின்றேன்.
இதற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றுக் கொண்ட கட்சிகளால் நாட்டுக்கு எவ்வித நன்மையும் ஏற்படவில்லை. மாறாக அழிவு நிலைக்கே சென்றது. எனவே கடந்த காலம் தொடர்பில் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 21 மணி நேரம் முன்

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
