பதுளையில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் கைது
பதுளை - ஹாலிஎல அன்துடுவாவெல பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, ஹாலிஎல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹாலிஎல அன்துடுவாவெல பகுதியை சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதிக்கு சென்று, சந்தேக நபரின் வீட்டை சோதனைக்கு உட்படுத்திய போது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிராம் 240 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணை
சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கும்பத்தில் சனி, சூரியன் சேர்க்கை... இந்த 3 ராசியினர் ஜாக்கிரதை! எச்சரிக்கும் ஜோதிட நிபுணர்கள் Manithan
தனுஷ் இல்லை, அசுரன் படத்தில் நான் நடித்திருக்கனும், விட்டுக்கொடுத்துட்டேன்.. சொன்னது யார் பாருங்க Cineulagam