மக்கள் ஆணையை சரியாகப் பயன்படுத்தாத வடக்கு - கிழக்கு அரசியலாளர்கள்: முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு
மக்கள் ஆணையைப் பெற்ற வடக்கு - கிழக்கு அரசியலாளர்கள் அதனைச் சரியாகப் பயன்படுத்தவில்லை என நாடாளுமன்ற தேர்தலில் யாழ். மாவட்டத்தில் பசு சின்னத்தில் போட்டியிடும் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் சுயேச்சைக் குழு தெரிவித்துள்ளது.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று (15.10.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அதன் தலைமை வேட்பாளர் தேவானந்த் கருத்து தெரிவிக்கையில்,
வாழ்க்கை மேம்பாடு
''தமிழ் மக்கள் தமது வாழ்க்கை மேம்பாடு, அரசியல் இருப்பு, சுயநிர்ணயம் என்பவை சார்ந்து ஒரு தீர்வு நோக்கிச் செல்லும் என்று பேரவாவோடு இருந்தார்கள். ஆனால் அவர்களின் பேரவா நிறைவேறும் திசையை நோக்கி எமது அரசியல் செல்லவில்லை.
ஆகவே ஒரு மாற்றம் தேவை என்று இன்று எண்ணுகின்றார்கள். தமது வாழ்வின் தேடலாக, தமது விரக்திக்கான வடிகாலாக இந்த நாடாளுமன்றத் தேர்தல் களத்தைப் பார்க்கிறார்கள்.
அரசியல் சூழல்
இந்த அரசியல் சூழலையே தமிழர் சம உரிமை இயக்கம் பயன்படுத்திக்கொள்ள முனைகின்றது.
எமது இயக்கம் தேர்தலுக்காக முளைத்த ஒரு கட்சி அல்ல. நீண்ட பயணத்தைக் கொண்ட இயக்கம். இப்போது தேர்தல் களத்தில் அது தன்னை முன்னிலைப்படுத்தியிருக்கின்றது’’ என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |