புதுக்குடியிருப்பில் சட்டவிரோதமான முறையில் வெடிபொருட்களை வைத்திருந்த நபர் கைது
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம் பகுதியில் நேற்று மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது மிதிவண்டி சைக்கில் ஒன்றில் சி4 வகை வெடிபொருட்கள் சட்டவிரோத பயன்பாட்டிற்காக கடத்தப்பட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
72 மணிநேரம் தடுத்து வைப்பு
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இவரிடம் இருந்து 900 கிராம் சி-4 வகை வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

புதுக்குடியிருப்பு, பொலிசார் மேற்கொண்ட சட்ட நடவடிக்கையின் போது சந்தேக நபரையும் சான்று பொருட்களையும் இன்று (16.03.2026) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளார்கள்.
இதன்போது, சந்தேக நபரை 72 மணிநேரம் தடுத்துவைத்து விசாரணை செய்ய மன்று உத்தரவு பெறப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிசார் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan