அவதானத்துடன் செயற்படவும்! இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையின் பல பாகங்களில் நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை குறித்து பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்றைய தினம் நாட்டின் பல பகுதிகளில் மனித உடலில் உணரப்படும் வெப்பச் சுட்டெண், 'அவதானம் செலுத்த வேண்டிய' மட்டத்தில் காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மொனராகலை, மன்னார், அனுராதபுரம் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் வெப்பத்தின் தாக்கம் இன்று அதிகமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது:

வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ளப் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார மற்றும் வானிலை நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அறிவுறுத்தல்
நீர் அருந்துதல்: தாகம் எடுக்காவிட்டாலும் அடிக்கடி அதிகளவு நீரை அருந்த வேண்டும்.
வேலை நேரக்கட்டுப்பாடு: வயல் வெளிகள் மற்றும் திறந்தவெளி கட்டுமானத் தளங்களில் நீண்ட நேரம் வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

பாதுகாப்பு: வயோதிபர்கள், நோயாளர்கள் மற்றும் சிறுவர்கள் தேவையற்ற முறையில் வெயிலில் செல்வதைத் தவிர்ப்பது அவசியமாகும்.
நிழல் தேடுதல்: வெளியில் செல்லும்போது குடை அல்லது தொப்பிகளைப் பயன்படுத்துவதுடன், முடிந்தவரை நிழலான இடங்களில் தங்குவது பாதுகாப்பானது.
தற்போதைய காலநிலையைத் தொடர்ந்து அவதானித்து வரும் வளிமண்டலவியல் திணைக்களம், இது குறித்த மேலதிக அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிடும் எனத் தெரிவித்துள்ளது.
போலி கணக்குகளை பயன்படுத்தி QR குறியீடு மோசடி! உத்தியோகபூர்வ வலைத்தளம் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri