இலங்கை சென்ற விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பிரித்தானிய பிரஜை
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து கட்டுநாயக்கவிற்கு வந்து மீண்டும் அமெரிக்கா நோக்கி சென்ற விமானத்தின் அவசர கதவை திறக்க முயற்சித்த வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்திய குறித்த பிரித்தானிய பிரஜையான வெளிநாட்டவரை விமான பணியாளர்கள் கட்டுப்படுத்தி வைத்துள்ளனர்.
கடந்த 29 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த வெளிநாட்டவர் குடிபோதையில் இவ்வாறு செயற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாட்டவர் கைது
இதனையடுத்து விமானத்தின் சீட் பெல்ட்களை பயன்படுத்தி இலங்கைக்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டு கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரித்தானியர், கொழும்பு அளுத்கடை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
குற்றத்தை ஏற்றுக்கொண்ட நிலையில் அவருக்கு 25000 ரூபா அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
