ஜனாதிபதி முன்வைத்த புதிய திட்டம்! விரைவில் நடைமுறைக்கு
Clean Sri Lanka நிதியத்தை ஸ்தாபித்தல் மற்றும் அதன் முகாமைத்துவம் தொடர்பில் ஜனாதிபதி செயலணியொன்றை உருவாக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்வைத்த இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.
“செல்வந்த நாடு, அழகிய வாழ்வு”
தற்போது இலங்கை பொருளாதாரத்தில் மாத்திரமன்றி அரசியல், சமூக, ஆன்மீக மற்றும் சுற்றாடல் ரீதியாகவும் குறிப்பிடத்தக்களவு பின்னடைவுகளைச் சந்தித்திருப்பதைக் கருத்தில் கொண்டு எமது நாட்டு மக்களின் நல்லாரோக்கியம், நல்லிணக்கம் மற்றும் முன்னேற்றத்தை உறுதிப்படுத்துவதன் மூலம் தேசிய பாதுகாப்பை அடைவதற்காக மேற்கொள்ளப்படும் தேசிய நடவடிக்கையாக "Clean Sri lanka" எனும் பெயரிலான வேலைத்திட்டமொன்று திட்டமிடப்பட்டுள்ளது.
“செல்வந்த நாடு, அழகிய வாழ்வு” எனும் புதிய அரசின் தொலைநோக்குக்கமைய மேற்கொள்ளப்படுகின்ற நிலையுருமாற்ற தொடக்க முயற்சி சமூக ரீதியான, சுற்றாடல் ரீதியான மற்றும் விழுமிய ரீதியான எழுச்சியை இலக்காகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படும்.
இவ்வேலைத்திட்டம் ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக நடைமுறைப்படுத்துவதற்கும், அதற்காக ஜனாதிபதி செயலணியொன்றை உருவாக்குவதற்கும், வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நிதியத்தை உருவாக்கவதற்காக பணிப்பாளர் சபையொன்றின் மூலம் நிர்வகிக்கப்படும் "Clean Sri lanka நிதியம்" னுெம் பெயரிலான நிதியத்தை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் நிறுவுவதற்கும் ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
