மட்டக்களப்பில் உணவகம் ஒன்றில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
மட்டக்களப்பு நகரில் பிரபலமான உணவகம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த திருடன் 6 இலச்சத்து 77 ஆயிரம் ரூபா மோட்டார் சைக்கிளை திருடியுள்ளதாக கூறப்படுகின்றது.
நேற்றுமுன்தினம் (20) பிற்பகல் 1.00 மணிக்கு திருடிச் சென்ற திருடன் ஒருவரை சிசிரிவி கமரா மூலம் 5 மணித்தியாலயத்தில் கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது
குறித்த உணவகத்தில் கடமையாற்றும் முகாமையாளர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் புதிதாக வாங்கிய மோட்டார் சைக்கிளை சம்பவ தினமான நேற்று உணவகத்தின் முன்னால் உள்ள வாகன தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர் மதிய வேளையில் மோட்டார் சைக்கிளை பார்த்தபோது திருட்டு போயுள்ளது.
இதன்போது, குறித்த சம்பவம் தொடர்பில் அவர் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து மட்டு.தலைமையக பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி கஜநாயக்க தலைமையில் பொலிஸ் சாஜன் இலகமே, ரகுமான் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் உணவகத்தில் உள்ள சிசிரி கமராவில் பதிவாகியுள்ள திருடனை அடையாளம் கண்டு கொண்ட பொலிஸார் குறித்த திருடனை மாலை 6.00 மணியளவில் கைது செய்ததுடன் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளையும் மீட்டனர்.
குறித்த திருடன் நகரில் சைக்கிள்களை திருடி வந்துள்ளதாகவும் ஏற்கனவே பல முன் குற்றம் கொண்டவர் எனவும் இவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri