நுவரெலியாவைப் போல காட்சியளிக்கும் கொழும்பு! பனிமூட்டத்தால் சூழப்பட்ட கட்டிடங்கள்..
கொழும்பின் பல பகுதிகளில் இன்று காலை முதல் கடும் பனிமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவி வருகின்றது.
நேற்று மாலை முதல் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் மழையுடனான காலநிலை நிலவி வருகின்றது.
இதன்காரணமாக, பொது மக்கள் தங்களது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சில சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
பனிமூட்டம்...
இந்தநிலையில், தொடர் மழையின் காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் கடும் பனி மூட்டம் நிலவுகின்றது.
கொழும்பு - கொள்ளுபிட்டி, கொட்டாஞ்சேனை உள்ளிட்ட நகரங்களில் பல கட்டிடங்கள் பனிமூட்டத்தால் மூடப்பட்டுள்ளன.

இதேவேளை, பிற்பகல் 2.00 மணிக்கு மேல் மாகாணம், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களத்தினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.




அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam