10 இலட்சம் பெறுமதியான மரக்குற்றிகளை கடத்தியவர் கைது - தீவிரப்படுத்தப்படும் சோதனை நடவடிக்கை
அனுமதிப்பத்திரமின்றி முதிரை மரக்குற்றிகளை முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பாரவூர்தியில் ஏற்றிச் சென்ற சாரதியொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை இன்று(05.05.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி போதைப்பொருள் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய மீசாலை பகுதியில் வைத்து குறித்த பாரவூர்தியை மறித்து சோதனை செய்யப்பட்டது.
10 இலட்சம் பெறுமதியான மரக்குற்றிகள் மீட்பு
இதன்போது, 10 இலட்சம் ரூபா பெறுமதியான 43 முதிரை மரக்குற்றிகளுடன் பாரவூர்தி மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன், பாரவூர்தியை ஓட்டி வந்த சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.
இந்நிலையில், பாரவூர்தி மற்றும் மரக்குற்றிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, விசாரணைகளின் பின்னர், சாரதி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று வெளியாகும் விஜயின் இறுதி தீர்மானத்திற்காக காத்திருக்கும் தமிழகம்! வரலாற்று திருப்பத்தில் தமிழ்நாட்டு அரசியல்களம்





வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri