சட்டவிரோதமாக 6 ஆயிரம் கிலோகிராம் கழிவுத் தேயிலை கடத்தியவர் கைது
அனுமதிப்பத்திரமின்றி 6,000 கிலோ கிராம் கழிவுத் தேயிலையை சந்தேக நபர் ஒருவர் லொறியொன்றின் கொண்ட சென்ற போது ஹட்டன் பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்று(11.06.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
6000 கழிவு தேயிலை மீட்பு
அக்கரப்பத்தனை பகுதியிலிருந்து குளியாபிட்டியாவிற்கு ஹட்டன் வழியாக கழிவுத் தேயிலையை ஏற்றிச் செல்லும் போதே ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் வைத்து ஹட்டன் பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் லொறியினை நிறுத்தி மேற்கொண்ட சோதனையின் போது உரிய அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக கழிவு தேயிலையை ஏற்றிச் செல்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்து மேற்கொண்ட விசாரணையின் பின்னர் கழிவு தேயிலை கடத்துவது உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
இதன்போது பயன்படுத்தப்பட்ட லொறியுடன் சந்தேக நபர் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam