கந்தளாய் பகுதியில் மானை வேட்டையாடிய குடும்பலில் ஒருவர் கைது..!
கந்தளாய் - சீனிபுர காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக மான் ஒன்றை வேட்டையாடிய நபர் வனவிலங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை நேற்று(11.05.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்ற இரண்டு சந்தேகநபர்கள் தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வனவிலங்கு அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை
கந்தளாய் - சீனிபுர காட்டுப்பகுதிக்குள் நீண்டகாலமாக விலங்குகள் வேட்டையாடப்பட்டு வந்ததாக வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தையடுத்து, அதிகாரிகள் நேற்று(11) இரவு பதுங்கிச் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது, சுமார் 100 கிலோ எடையுடைய மான் ஒன்றை மூவர் கொண்ட குழுவொன்று துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தியதுடன், பின்னர் கத்தியால் கழுத்தை அறுத்திக் கொண்டு செல்ல முற்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பதுங்கியிருந்த வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், மற்ற இருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திலிருந்து கத்தி,தொலைபேசி, துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் தோட்டாக்கள், மேலங்கி மற்றும் 3,850 ரூபாய் பணம் உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று(12) கந்தளாய் நீதிமன்றில், முற்படுத்த நடவடி்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam